விருதுநகர் சந்திக்கூட தெருவில் 10 பேரை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் 9 பேர் விருதுநகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். நகராட்சி நிர்வாகம் தெரு நாய் தொல்லையில் இருந்து மக்கள் விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.