இருதரப்பினர் இடையே தகராறு; 22 பேர் கைது

இருதரப்பினர் இடையே தகராறு; 22 பேர் கைது

Update: 2023-05-28 19:16 GMT

அம்மாப்பேட்டை அருகே இறந்தவர் உடலை எடுத்து செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

இருதரப்பினர் இடையே தகராறு

அம்மாப்பேட்டை அருகே கீழகோவில்பத்து கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது53). இவர் கடந்த 27-ந்தேதி அதிகாலை இறந்தார். வடபாதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு வழியாக அன்று மாலை சீனிவாசன் உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக அவரது உறவினர்கள் எடுத்து சென்றனர்.

அப்போது வடபாதி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ஒரு தரப்பினர் இங்கு திருமண வரவேற்பு விழா நடப்பதால் வேறு வழியாக உடலை எடுத்து செல்ல கூறினர். ஆனால் சீனிவாசன் உடலை அந்த தெரு வழியாக தான் எடுத்து செல்வோம் என கூறி சீனிவாசன் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

22 பேர் கைது

இதில் கற்களாலும், கட்டைகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 10-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் ஜீப்பும், தனியார் பஸ்சும் சேதமடைந்தன. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 22 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்