உளுந்தூர்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் தகராறு 15 பேர் மீது வழக்குப்பதிவு
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் சேகர் (வயது 50), பாஸ்கர் (32) ஆகியோர் அய்யனார் மடத்திற்கு சென்று அங்கிருந்த தங்கவேல் என்பவரிடம் ஊர் தலைவரை அழைத்து வந்து மரியாதை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அப்போது சேகர் தரப்பிற்கும் தங்கவேல் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் உருவாகி தகராறு ஏற்பட்டது. அப்போது, சேகர், பாஸ்கர் இருவரையும் தங்கவேல், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ரகுபதி, ராஜதுரை, விக்னேஷ், தண்டபாணி, வீரப்பன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கர் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தங்கவேல், மணிகண்டன், ரகுபதி, ராஜதுரை, விக்னேஷ், தண்டபாணி, வீரப்பன், ராகுல் உள்பட 15 பேர் மீது திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.