மாடியில் இருந்து தவறி விழுந்து மாற்றுத்திறனாளி சாவு

பரப்பாடி அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து மாற்றுத்திறனாளி இறந்தார்.

Update: 2022-07-10 20:07 GMT

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் பாலமுருகன் (26). மாற்றுத்திறனாளியான இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி இரவு பாலமுருகன் தனது வீட்டு மாடியில் அமர்ந்திருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் உள்ளவர்கள் பார்த்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்