மருதையாற்றின் கரைகளை உயர்த்த கோரிக்கை
மருதையாற்றின் கரைகளை உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், முத்துவாஞ்சேரி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மருதையாறு சந்திக்கும் இடத்தில் தண்ணீர் வெளியேறி விளை நிலங்களை சேதப்படுத்தி விடுகிறது. எனவே இரண்டு ஆறுகளும் சந்திக்கும் இடத்தில் உள்ள மருதையாற்று கரைகளை உயர்த்தி, பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.