கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2023-04-19 18:56 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை மான் ஒன்று தவறி விழுந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி காயமின்றி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் நந்திபென்டா செட்டேரி டேம் அருகே உள்ள காப்புகாட்டு பகுதியில் மான் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்