பாறையில் இருந்து தவறி விழுந்த மான் சாவு

பாறையில் இருந்து தவறி விழுந்த மான் சிகிச்சை பலனின்றி இறந்தது.

Update: 2022-09-15 19:00 GMT

கொடைக்கானல் வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக உணவு, தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் பெரும்பள்ளத்தை அடுத்த பி.எல்.செட் அருகே இரைதேடி வந்த ஒரு மான் அங்குள்ள பாறையில் ஏற முயன்ற போது நிலைதவறி சாலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மானை தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மீட்டு கால்நடை டாக்டர்கள் மூலம் தொடர் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த மான் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அதன் உடலுக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்த மான் சாம்பார் வகையை சேர்ந்தது. 8 வயது நிரம்பிய ஆண் மான் ஆகும். பாறை மீதிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்து அந்த மான் உயிரிழந்ததா? அல்லது ஏதேனும் வாகனம் மோதி பலியானதா? என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்