பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு - சபாநாயகர் அப்பாவு தகவல்

பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-12 16:23 GMT

நெல்லை,

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப் பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது. பொன்முடி மேல்முறையீடு செய்ததால், அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருடைய தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும்.

ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல் ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு சட்டப்பேரவை முதன்மைச் செயல்ருடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்