இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

திருச்செந்தூர் கடலில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

Update: 2023-09-30 19:00 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். திருச்செந்தூர் கால்நடை டாக்டர் பொன்ராஜ் தலைமையில், அந்த ஆண் ஆமை உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதே பகுதியில் ஆமையை வனத்துறையினர் புதைத்தனர்.

இந்த வகை ஆமை திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும். இது அதிக அளவில் மீனை உட்கொண்டதால் கரை ஒதுங்க முயன்ற போது அலைகளின் சீற்றத்தால் இந்த ஆமை அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்