கிணற்றில் இறந்து கிடந்த காளை

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் தோட்டத்து கிணற்றில் காளைமாடு ஒன்று இறந்து கிடந்தது.

Update: 2023-08-27 21:45 GMT

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் தோட்டத்து கிணற்றில் காளைமாடு ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதியினர் வருவாய்த்துறை, கால்நடைத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பழனி தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்து காளை மாட்டின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர்களால் மாட்டின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது.

விசாரணையில், இறந்த காளைமாடு ஆயக்குடியை சேர்ந்த விவசாயி தங்கநாயகத்துக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் சட்டப்பாறை மலையடிவார தோட்டத்தில் சில நாட்களாக காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவு தங்கநாயகத்தின் தோட்டத்தில் யானைகள் புகுந்துள்ளது. அப்போது காட்டுயானைகளை கண்டு மிரண்டு மாடுகள் அங்குமிங்கும் ஓடி உள்ளன. அதில் ஒரு காளைமாடு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்