விக்கிரவாண்டி அருகே சோகம்குட்டையில் பிணமாக மிதந்த பச்சிளம் குழந்தைபோலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி அருகே குட்டையில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-04 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி தாலுகா அத்தியூர் திருக்கை கிராமத்தில் குட்டை ஒன்று உள்ளது. அங்கு கிடந்த தண்ணீரில், குழந்தை ஒன்று பிணமாக மிதந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், கஞ்சனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணமாக கிடந்த குழந்தையை மீட்டனர். தொப்புள் கொடியுடன் இருந்த அது, ஆண் குழந்தை என்பது தெரியவந்தது.

மேலும் பிறந்து சில மணி நேரங்களிலேயே யாரோ அந்த குழந்தையை குட்டையில் வீசிச்சென்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் கொடுத்த புகாரின் போில், போலீசார் வழக்குப்பதிவு செய்து யாரேனும் குழந்தையை கடத்தி, கொன்று வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?, குழந்தையின் தாய் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்