கலெக்டா் அலுவலகத்தில் தினம் ஒரு திருக்குறள் நடைமுறைக்கு வந்தது

கலெக்டா் அலுவலகத்தில் தினம் ஒரு திருக்குறள் நடைமுறைக்கு வந்தது.

Update: 2023-05-22 21:02 GMT

தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், அரசின் தலைமை செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ் சொல்லையும், ஒரு திருக்குறளை பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு சில அலுவலகங்களை தவிர மற்ற பெரும்பாலான அலுவலகங்களில் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறைகளும் இந்த உத்தரவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் தினம் ஒரு திருக்குறள் கரும்பலகை வைக்கப்பட்டு அதில் திருக்குறள் எழுதப்பட்டு அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் பிறமொழிச்சொல் விளக்க பகுதியில் ஆங்கில வார்த்தை எழுதப்பட்டு அதற்கான தமிழ்ச்சொல் எழுதப்பட்டிருந்தது. இதை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்