ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாகலம்மன் நகர் முதல் வாணியம்பேட்டை வரை செல்லும் ஜி.கே.என் நகர் பகுதியில் (பட்டேல் ரோட்டில்) பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு அருகே சிமெண்டு மின்கம்பம் ஒன்று விரிசல் ஏற்பட்டு கம்பி வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.