ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

தற்காஸ் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பதை அகற்றிவிட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-02-12 18:45 GMT

கொள்ளிடம்:

தற்காஸ் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பதை அகற்றிவிட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான மின்கம்பம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி தற்காஸ் கிராமம் தோணித்துறை செல்லும் சாலையில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் எந்தநேரத்திலும் விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் மரத்தின் மீது உரசி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் செல்கின்றனர். அந்த பகுதியில் விளையாடும் குழந்தைகளுக்கு மரத்தில் உரசும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் உள்ளது.

புதிதாக அமைத்து தர வேண்டும்

இதுகுறித்து தோணித்துறை கிராம மக்கள் கூறுகையில்,

தோணித்துறை கிராமத்தில் மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது இந்த மின்கம்பம் சேதமடைந்து அருகில் உள்ள மரத்தின் மீது மின்கம்பிகள் உரசி செல்கிறது. இதனால் இந்த மின்கம்பம் எந்தநேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்