ஆபத்தான மின்கம்பம் அகற்றப்பட்டது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.

Update: 2022-07-05 17:13 GMT

திட்டச்சேரி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.

ஆபத்தான மின்கம்பம்

திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் கணபதிபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளாறு, பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகை உள்ளிட்ட பல்வேறு பகதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பஸ்நிறுத்தம் அருகே இருந்த மின்கம்பம் சேதமடைந்து காணப்பட்டது. இந்த மின்கம்பத்தின் அடி பகுதியில் சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.

அகற்றப்பட்டது

அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறவே பொதுமக்கள் அச்சப்பட்டனர். இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்ட மின்கம்பத்தை அகற்றி விட்டு அங்கு புதிய மின்கம்பம் அமைத்தனர். இதை தொடர்ந்்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்