தினசரி ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும்
தினசரி ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் 7-வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட தலைவராக மருது பாண்டியனும், செயலாளராக நாகராஜனும், 31 நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமசாமி நிறைவுறையாற்றினார். தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் வரவேற்றார்.