இறைச்சி வாங்க அலைமோதிய கூட்டம்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இறைச்சி வாங்க கூட்டம் அலைமோதியது.

Update: 2023-01-17 18:45 GMT

இறைச்சி கடைகளில் கூட்டம்

மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் கரிநாள் என்பதால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். கரிநாளையொட்டி அசைவமாக இறைச்சி வாங்கி வீடுகளில் சமைத்து தங்களது உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டனர். இதனால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள ஆடு, கோழி, பன்றி, மாடு ஆகிய இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்குவதற்கும், மீன் கடைகளில் மீன்கள் வாங்குவதற்கும் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவுக்கு இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

ஒரு கிலோ ரூ.800

ஒரு கிலா ஆட்டுக்கறி ரூ.800-க்கும், கோழிக்கறி ரூ.170-க்கும், பன்றிக்கறி ரூ.250-க்கும், மாட்டுக்கறி ரூ.350-க்கும் விற்பனையானது. பல்வேறு வகையான மீன்கள் விற்றன. குறைந்த விலையாக ஜிலேபி மீன் ஒரு கிலோ ரூ.150-க்கும், அதிக பட்ச விலையாக வஞ்சரம் மீன் கிலோ ரூ.1,200-க்கும் விற்பனையானது. இதேபோல் நண்டு, இறால் மற்றும் காடை ஆகியவற்றின் விற்பனையும் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்