அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Update: 2023-01-22 10:20 GMT

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

கடந்த சில தினங்களாக அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்