கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்

கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்

Update: 2022-07-24 20:12 GMT

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு விடுமுறை நாட்களில் திரளான மக்கள் வந்து செல்வார்கள். அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி காலை முதலே ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து கல்லணையில் உள்ள கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆற்றில் தண்ணீர் வெளியேறும் அழகையும், கல்லணையில் தண்ணீர் நிரம்பி இருக்கும் அழகையும் பார்த்து ரசித்தனர். கல்லணை சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு விளையாட்டு சாதனங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட வைத்து பெற்றோர் அழகுபார்த்தனர். ராட்சத ராட்டினங்களில் குழந்தை களுடன் பெற்றோர்களும் அமர்ந்து உற்சாக குரல் எழுப்பி விளையாடினர். கல்லணையில் நேற்று அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால் ஆறுகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் மேல் நின்று வெளியேறும் தண்ணீரின் அழகை பார்த்து ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்