கிராமத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது
சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே வால்காரமேடு கிராமத்தில் நேற்று காலை முதலை ஒன்று புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிதம்பரம் வனவர் பிரபு தலைமையில் வனக்காப்பாளர் ஞானசேகர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதலையை போராடி பிடித்தனர். சுமார் 8 அடி நீளமும், 90 கிலோ எடையும் கொண்ட அந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்த்தேக்கத்துக்கு கொண்டு சென்று விட்டனர்.