பாபநாசம் அணை நீரில் நீண்டநேரம் மிதந்த முதலை

பாபநாசம் காரையாறு அணையில் தண்ணீர் மிகவும் குறைந்து குட்டை போல் காணப்படுகிறது. அந்த தண்ணீரில் முதலை ஒன்று நீண்டநேரம் மிதந்தபடி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-19 21:38 GMT

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாவட்டத்தின் பிரதான அணையான காரையாறு அணை உள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அணையில் முதலைகளும் காணப்படுகின்றன. இதனால் அதுகுறித்து அணையின் அருகே எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அவ்வப்போது முதலைகள் தண்ணீரில் இருந்து வெளியே வந்து அணையின் கரையோரத்தில் ஓய்வெடுத்து செல்கின்றன.

இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாததாலும், கோைட வெயில் வாட்டி வதைப்பதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 15.55 அடியாக இருந்தது. இதனால் தண்ணீர் மிகவும் குறைவாக காணப்படுவதால் குட்டை போல் காட்சி அளிக்கிறது. அந்த தண்ணீரில் முதலை ஒன்று நீண்ட நேரம் தலையை வெளியே காட்டியவாறு மிதந்து கொண்டிருந்தது. மேலும் அவ்வப்போது தண்ணீரில் மூழ்கி வெளியே வந்தது. இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்