புதிய பாலத்தின் மையப்பகுதியில் விரிசல்

கன்னியாபுரத்தில் புதிய பாலத்தின் மையப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-20 19:45 GMT

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அந்த சாலையில் 10 இடங்களில் புதிதாக பாலங்கள் கட்டப்பட்டன. இதில் கன்னியாபுரம் சந்தானவர்த்தினி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் தற்போது ஆங்காங்கே பள்ளங்கள், விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. பாலத்தின் மையப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு இணைப்புக்காக பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்-நத்தம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால் சேதம் அடைந்த பாலத்தில் மேலும் விரிசல் அதிகமாகி வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்