கயத்தாறு:
கயத்தாறு அருகே சவாலாப்பேரி மேலத்தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மனைவி சொர்ணம் (வயது 45). இவர் மாடுகளை தோட்டத்தில் மேய்த்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நாற்கர சாலையில் மாடுகள் சென்றபோது, சேலத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென ஒரு மாட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. காரில் பயணம் செய்த பெண் ஒருவரும் காயமடைந்தார். அவர் கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.