சேற்றுக்குள் சிக்கிய மாடு உயிருடன் மீட்பு
சேற்றுக்குள் சிக்கிய மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை புகழூர் முதலியார் வாய்க்காலில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது வாய்க்கால் சேற்றில் பசுமாடு சிக்கி கொண்டது.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வந்து பசுமாட்டை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சேற்றில் சிக்கிய பசுமாட்டை கயிறு மூலம் கட்டி இழுத்து உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.