80 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2023-07-31 18:28 GMT

இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத 80 அடி ஆழ கிணற்றில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த பசுமாடு ஒன்று தவறி விழுந்து விட்டதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர் ஒருவர் கிணற்றில் இறங்கி பசுமாட்டை கயிற்றின் உதவியுடன் மேலே தூக்கி உயிருடன் மீட்டனர். அதன்பின்னர் கிணற்றின் உரிமையாளரிடம் கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க தீயணைப்புதுறையினர் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்