கிணற்றில் விழுந்த சினைப்பசு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த சினைப்பசு உயிருடன் மீட்கப்பட்டது.;

Update: 2023-02-12 20:02 GMT

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் மேற்கு வீதியை சேர்ந்தவர் ராமராஜ். கூலி வேலை செய்து வருகிறார். இவர் காஞ்சேரிமலைப்புதூர் சாலையில் மாடுகளை மேய்த்தபோது, ஒரு சினைப்பசு அருகில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இது குறித்த தகவலின்பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீரில் தத்தளித்த பசுவை கயிறு மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். பசுவை மீட்கும் பணியின் போது, அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் கூடியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்