கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.;

Update: 2022-12-21 19:04 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த சி.கே. ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவருக்கு சொந்தமான காளை மாடு 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்