கிணற்றுக்குள் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
கிணற்றுக்குள் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் மூங்கில்பாளையம் பிரிவு அருகே உள்ள குத்தகை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. விவசாயி. இவர் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவருடைய தோட்டத்தில் எருமை மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள சுற்றுச்சுவர் இல்லாத 70 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் எருமை மாடு தவறி விழுந்து விட்டது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால், அதில் நீந்தியபடி எருமை மாடு தத்தளித்துக்கொண்டிருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரேன் மூலம் எருமையை உயிருடன் மீட்டனர்.