அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு பலி
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு பலி
செங்கம்
செங்கம் அருகே கரியமங்கலம் ஊராட்சி மேல்கரியமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது.
அப்போது அங்கே மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
எனவே, விவசாய நிலங்களில் வலுவிழந்த பழைய மின் கம்பிகளை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.