60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-11-26 13:39 GMT

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே நாயனசெருவு மூக்கனுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னமணி (வயது 55). இவருக்கு சொந்தமான பசுமாடு உள்ளது. இதில் 7 மாதம் சினை மாட்டை மேய்ச்சலுக்காக இன்று விவசாய நிலத்தில் அழைத்து சென்றார்.

அப்போது 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னமணி பசு மாட்டை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை காயமின்றி உயிருடன் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்