நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலி
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலியானது.;
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புல்லுப்பத்தி மலை பகுதியில் மேய்ச்சல் மாடுகள் மேய்ந்து கொண்டிந்தன. அப்போது அங்கு வனவிலங்குகளை வேட்டையாட கொய்யாப்பழத்திற்குள் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்திருந்தனர்.
இந்த பழத்தை கடித்த பசுமாடு வாய் சிதறி உயிரிழந்தது. மற்றொரு மாடு காயத்துடன் உயிருக்கு போராடியது. இதுகுறித்து பி.எஸ்.கே. மாலையாபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில் சேத்தூர் புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.