இடி-மின்னல் தாக்கி பசுமாடு சாவு

சாத்தான்குளம் அருகே இடி-மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்து போனது.

Update: 2022-11-02 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சாத்தான்குளம் அருகே கொழுந்தட்டு கிராமத்தை சேர்ந்த ஞானசெல்வபிரகாஷ் மனைவி மரியசுசீலா (வயது 45) என்பவருக்கு சொந்தமான பசு மாடு சினை ஈனும் பருவத்தில் வாலத்தூர் என்ற இடத்தில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்தது. இடி மின்னல் விழுந்த அதிர்ச்சியில் மிரண்ட பசுமாடு, பீதியில் அங்கும் இங்கும் ஓட முயன்றது. இதில் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு இறுக்கி பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

Tags:    

மேலும் செய்திகள்