மின்னல் தாக்கி பசுமாடு சாவு

கரியாப்பட்டினம் பகுதியில் பலத்த மழையால் மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.

Update: 2023-10-13 18:45 GMT

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் பகுதியில் நேற்று மதியம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வடமழை பகுதியை சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. தகவல் அறிந்ததும் கால்நடை டாக்டர் சம்பவ இடத்திற்கு வந்து மாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தார். பின்னர் மாட்டை உறவினர்கள் புதைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்