மர்ம விலங்கு கடித்து பசு மாடு பலி
தேவர்சோலை அருகே மர்ம விலங்கு கடித்து பசு மாடு பலியானது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.;
கூடலூர்
தேவர்சோலை அருகே மர்ம விலங்கு கடித்து பசு மாடு பலியானது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
பசு மாடு பலி
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன் எஸ்டேட் நம்பர் 1 டிவிசன் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் சமயத்தில் கால்நடைகளை புலி அல்லது சிறுத்தைகள் கடித்து கொன்று விடுகின்றன.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்தாசன் என்பவர் தனது மாடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு அனுப்பினார். இதில் 4 வயதான பசு மாடு வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் அரவிந்த்தாசன் மாட்டை தேடினார். அப்போது அதே பகுதியில் உள்ள எஸ்டேட்டுக்குள் மர்ம விலங்கு கடித்து பசு மாடு இறந்து கிடந்தது.
வனத்துறையினர் விசாரணை
இதுகுறித்து வனத்துறை, வருவாய் துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளை வனவிலங்குகள் ஊருக்குள் வந்து கடித்துக் கொன்று வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து பசு மாட்டின் உடல் கால்நடை மருத்துவ குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பசு மாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, பசு மாட்டை கடித்தது புலியா அல்லது சிறுத்தையா என தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றார்.