நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக்கூறி வழக்கு தொடர்ந்த தம்பதி - மரபணுவை பாதுகாக்க கோரிக்கை

கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரது மரபணுவை எடுத்து பாதுகாக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2023-04-11 16:38 GMT

மதுரை,

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக்கூறி மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரது மரபணுவை எடுத்து பாதுகாக்க வேண்டும் என அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை ரத்தினவேலுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வழக்கறிஞர் டைட்டஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது உடலில் உள்ள அங்க அடையாளங்களை லேசர் மூலம் அளித்துள்ளார் எனவும், பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை தவறாக தாக்கல் செய்துள்ளார் என்றும் தெரிவித்தார். எனவே, கதிரேசனின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்