சாவிலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு..

சாவிலும் இணைபிரியாத தம்பதியின் உடல்கள் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.;

Update:2024-01-28 21:19 IST

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை சிவன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் நாயக்கர் (வயது 82). இவரது மனைவி ராஜம்மாள் (78). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக தம்பதிகள் 2 பேரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜம்மாள் உடல்நலக்குறைவால் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். மனைவி இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் நாயக்கர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இதனால் 2 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். சாவிலும் இணைபிரியாத தம்பதியின் உடல்கள் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மனைவி இறந்த சிறிது நேரத்தில் கணவரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்