சாவிலும் இணைபிரியாத தம்பதி
காவனூர் கிராமத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதியால் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலம் (வயது 81), விவசாயி. இவரது மனைவி அலமேலு (74). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை வயது முதிர்வால் அலமேலு இறந்தார். பின்னர் மனைவி இறந்த சில மணி நேரத்தில் செங்கமலமும் இறந்தார். ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதி சாவிலும் இணைபிரியாமல் இறந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.