இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு ஜோடிக்கு திருமணம்
செய்யாறில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யாறு தாலுகா வடபூண்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் தமிழக அரசின் சார்பில் 4 கிராம் தங்கத்தில் தாலியுடன் கட்டில், பீரோ உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடந்தது.
விழாவுக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
விழாவில் திருவத்திபுரம் நகரமன்றத் தலைவர் ஆ.மோகனவேல், நகரமன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன், கார்த்திகேயன், செந்தில், கங்காதரன், சுந்தரபாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறநிலையத்துறை சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.