மக்காச்சோள காட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைப்பு
மக்காச்சோள காட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டது.;
டி.என்.பாளையம்
கடம்பூர் அடுத்த ஏரியூர் கிராமத்தில் உள்ள ஒரு மக்காச்சோள காட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் ஏரியூரில் உள்ள குறிப்பிட்ட மக்காச்சோள காட்டுக்கு சென்றனர்.
அப்போது அங்கு நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். ேமலும் அங்கு சமையலுக்கு தேவையான பொருட்கள் இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். நாட்டு துப்பாக்கியை மக்காச்சோள காட்டில் பதுக்கி வைத்தவர் யார்? எதற்காக பதுக்கி வைத்தனர்? வனவிலங்குகளை வேட்டையாடவா? அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.