காவிரி நீரை பெற்றுத் தரக்கோரி தொடர் முழக்க போராட்டம்
மயிலாடுதுறையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரி தொடர் முழக்க போராட்டம் நடந்தது.;
மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தர கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சிம்சன் தலைமை தாங்கினார். டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் காவிரியில் கர்நாடகம் வழங்க வேண்டிய சட்டரீதியான தண்ணீரை உடனடியாக திறந்திட சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக எடுத்து உடன் உத்தரவிட வேண்டும். காவிரியில் தமிழகத்துக்கு மாதவாரியாக தண்ணீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் விவசாய சங்க பிரமுகர்கள் திரளானோர் பங்கேற்றனர்.