மேலகிருஷ்ணன்புதூரில் கட்டிட தொழிலாளி செங்கல்லால் அடித்து கொலையா? போலீசார் விசாரணை
மேலகிருஷ்ணன்புதூரில் கட்டிட தொழிலாளி செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்:
மேலகிருஷ்ணன்புதூரில் கட்டிட தொழிலாளி செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கட்டிட தொழிலாளி
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்புகாடு புல்லுவிளையை சேர்ந்தவர் ராஜதுரை (வயது50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு அபினேஷ், அருண் என 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் ராஜதுரை மேலகிருஷ்ணன்புதூர் செல்வதாக கூறிவிட்டு வந்தார். பின்னர் இரவாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இதையடுத்து அவரது மனைவி மற்றும் மகன்கள் அவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பை அடுத்த முதல் தெருவில் ராஜதுரை இறந்து கிடப்பதாக அவரது மகனுக்கு ஒருவர் தகவல் ெகாடுத்தார்.
இதையடுத்து அவரது மகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
ெசங்கல்லால் அடித்து கொலை?
ராஜதுரை பிணமாக கிடந்த இடத்தின் அருகே மது பாட்டில்கள் உடைந்து கிடந்தன. பிணத்தின் அருகில் செங்கற்கள், ஒரு கைக்கெடிகாரம் உடைந்த நிலையில் கிடந்தன. மேலும் ஒரு மோட்டார் சைக்கிளின் சாவியும் கிடந்தது. ராஜதுரையின் முகம், மார்பு, முதுகு போன்ற பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்தன.
எனவே மர்ம நபர்கள் ராஜதுரையை செங்கற்களால் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து பிணத்தை ேபாலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த ராஜதுரை மீது ஏற்கனவே சில திருட்டு வழக்குகள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சகோதரர் வீட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ராஜதுரை எடுத்துச் சென்றதாக ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் ராஜதுரையை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ராஜதுரை கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் தகராறு ஏற்பட்டு அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா காட்சி
இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது நேற்று முன்தினம் இரவு மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு பகுதியில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது தவறி கீழே விழும் காட்சி பதிவாகி இருந்தது. அப்போது அங்கு நின்ற ஒருவர் அந்த நபரை காப்பாற்ற முயன்றார். உடனே, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காப்பாற்ற முயன்ற நபரை தாக்குகிறார். இதைபார்த்த ராஜதுரை மோட்டார் ைசக்கிளில் வந்த நபரை தட்டிக்ேகட்டு அவரது வாகன சாவியை எடுத்து செல்வதும், உடனே அந்த நபர் ராஜதுரையை துரத்தி தாக்குவதும், பின்னர் அந்த நபர் சாவி இல்லாமல் வாகனத்தை உருட்டி செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவு
இதன் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்தான் ராஜதுரையை கொன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக அந்த நபரை பிடிக்கும் பணியில் ேபாலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் இவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.