இருதரப்பினர் இடையே மோதல்
முதுகுளத்தூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனக்குறிச்சி மற்றும் ஆதனகுறிச்சி காலனி ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆதனகுறிச்சி காலனி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆதனகுறிச்சி காலனியை சேர்ந்த சிலர் தகாத வார்த்தையில் பேசியதாகவும், அதேபோல் ஆதனக்குறிச்சி காலனியைச் சேர்ந்த குலதெய்வ கோவிலுக்கு சென்ற நபர்களை ஆதனக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பதற்றம் நிலவியதை தொடர்ந்து 2 கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.