அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம்

கும்பகோணத்தில் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடந்தது.

Update: 2023-03-10 18:49 GMT

கும்பகோணம்:

குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்கம் மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க தலைவர் சோழா.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். துணைத்தலைவர் ரமேஷ்ராஜா, பொருளாளர்கள் மாணிக்கவாசகம், கியாசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகிற மே மாதம் 5-ந் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் சங்க மாநில மாநாட்டை வெற்றிபெற செய்ய ஏதுவாக வருகிற 14-ந்தேதி ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல ஆலோசனை கூட்டத்தை கும்பகோணத்தில் சிறப்பாக நடத்துவது. கூட்டத்திற்கு வரும் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு தெற்கே அரசலாற்றில் உயர்மட்ட போக்குவரத்து பாலம் கட்டப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைச் செயலாளர் வேதம் முரளி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்