ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக புகார் அளிக்கலாம்

ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-18 19:16 GMT

பொது வினியோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இதில் ஈடுபடுவர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொது வினியோக திட்டப்பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை கரூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்