வாலிபருக்கு ரூ.10¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

சேவை குறைபாடு: வாலிபருக்கு ரூ.10¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் காப்பீட்டு நிறுவனத்துக்கு கடலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Update: 2023-05-05 18:45 GMT

கடலூர்

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் எழிலரசன் மகன் ராகுல்ராஜ் (வயது 24). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடலூரில் உள்ள அரசு ஓரியண்டல் இன்சூரன்ஸ்(காப்பீ்ட்டு) நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். இந்த வாகனத்தை கடந்த 15.10.2021 அன்று அவரது சகோதரர் ஜீவன்ராஜ் புதுச்சேரி நோக்கி ஓட்டிச்சென்றார். அவர் சின்னகங்கணாங்குப்பம் அருகே சென்ற போது, நாய் குறுக்கே வந்ததால், திடீரென பிரேக் போட்டதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜீவன்ராஜ் காயமடைந்தார். மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது.

இதையடுத்து ராகுல்ராஜ் இது பற்றி இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து, காப்பீட்டு தொகை கேட்டார். அதன்படி இன்சூரன்ஸ் நிறுவனம் புலனாய்வாளரை நியமித்து, விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் வீலிங் செய்யும் போது முறையற்ற சமநிலை என்று கூறப்பட்ட வாகனத்தால் ஏற்படும் சேதங்களின் தன்மையின் அடிப்படையில் மட்டுமே தான் விபத்து ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதன்படி இன்சூரன்ஸ் நிறுவனம் ராகுல்ராஜ் கோரிக்கையை நிராகரித்தது.

இதையடுத்து அவர் கடலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர், இது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு என்றும், சேதமடைந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்கு ரூ.9½ லட்சம், சேவை குறைபாட்டிற்கு ரூ.1 லட்சம், சட்ட செலவுகளை திருப்பி செலுத்த ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.10¾ லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்