மணக்கோலத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவி

கும்பகோணத்தில், திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் கல்லூரி மாணவி தேர்வு எழுதினார். அவரை ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டினர். .

Update: 2023-04-10 18:45 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில், திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் கல்லூரி மாணவி தேர்வு எழுதினார். அவரை ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டினர். .

திருமணம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மெய்க்காவல் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவர், தஞ்ைச மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் நேற்று காலை காட்டுமன்னார்கோவிலில் திருமணம் நடந்தது.

மணக்கோலத்தில் தேர்வெழுதிய கல்லூரி மாணவி

இந்த நிலையில் மணப்பெண் இந்துமதிக்கு நேற்று மதியம் கல்லூரியில் செய்முறை தேர்வு நடந்தது. மணப்பெண் இந்துமதி தனக்கு திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் தனது கணவரை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதினார்.

திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவி இந்துமதியை ஆசிரியர்கள், சக மாணவிகள் என அனைவரும் பாராட்டினர்.

வெற்றி பெறுவேன்

இதுகுறித்து மாணவி இந்துமதி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமண நிச்சயம் நடந்தது. திருமணத்துக்கு தேதி குறித்த பின் கல்லூரியில் செய்முறை தேர்வு திருமண நாளில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நான் எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். என்னை திருமணம் செய்ய இருந்த சுதர்சன் தேர்வுக்கு படித்து தயாராகும்படி என்னை அறிவுறுத்தி இருந்தார். இன்று(அதாவது நேற்று) காலை எனக்கு திருமணம் முடிந்த நிலையில் எனது பெற்றோரும், கணவரும் என்னை தேர்வு எழுத கும்பகோணத்துக்கு அழைத்து வந்தனர். நான் நல்ல முறையில் தேர்வு எழுதி உள்ளேன். மற்ற தேர்வுகளையும் நல்ல முறையில் எழுதி தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்