போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கல்லூரி மாணவி, காதலனுடன் தஞ்சம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கல்லூரி மாணவி, காதலனுடன் தஞ்சம் அடைந்தது.

Update: 2023-06-08 20:57 GMT

மேட்டூர் அடுத்த வீரக்கல் புதூரை சேர்ந்தவர் முத்து மாணிக்கம். இவருடைய மகன் முகிலரசன் (வயது 23). இவர் மேட்டூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.காம். முடித்துள்ளார். இவருக்கும், அதே கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வரும் கோனூர் புது வேலமங்களம் பகுதியை சேர்ந்த கிருபா (20) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 5-ந் தேதி காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் திருச்செங்கோடு அருகே பன்னீர்குத்திபாளையம் பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கிருபா-முகிலரசன் காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு நேற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள், சாதி கலப்பு திருமணம் செய்து கொண்டதால் எனக்கும், எனது கணவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி மனு ஒன்றை வழங்கினர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்