காதல் கணவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்

Update: 2023-04-25 19:51 GMT

தேவூர்:-

தேவூரை சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் குணா (வயது 22), எலக்ட்ரீசியன். இவருக்கும், இவருடைய உறவினரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்த ஆண்டவர் என்பவரின் மகளும், கல்லூரி மாணவியான ஜோதிகா (20) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கோவிலில் திருமணம் செய்து கொண்ட அந்த காதல் ஜோடி நேற்று தேவூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது.

இதையடுத்து இருவரின் பெற்றோரையும் அழைத்து தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜோதிகா, தனது காதல் கணவருடன் தான் செல்வேன் என கூறியதை அடுத்து, குணா குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்