கோரையாற்று கரையில் சரிந்து விழுந்த தடுப்புச்சுவர்
கோரையாற்று கரையில் சரிந்து விழுந்த தடுப்புச்சுவர்
நீடாமங்கலம்
நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பில் கோரையாற்று கரையில் சரிந்து விழுந்த தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூணாறு தலைப்பு
நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை உள்ளது. இந்த அணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இங்கு கல்லணையிலிருந்து வரும் பெரிய வெண்ணாறு தண்ணீர் மூணாறு தலைப்பில் பாமனியாறு, கோரையாறு, வெண்ணாறு என மூன்று ஆறுகளாக பிரிகிறது.
பாமனியாற்றின் மூலம் 38,357 ஏக்கரும், கோரையாற்றின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கரும், வெண்ணாற்றின் மூலம் 94,219 ஏக்கரிலும் விவசாயத்திற்கு பாசன நீர் செல்கிறது.
தடுப்புச்சுவர் சரிந்து விழுந்தது
கடந்த சி்ல நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் கோரையாறு தலைப்பிலிருந்து வடக்கு கரையில் கட்டப்பட்டிருந்த பழமையான தடுப்புச்சுவர் சரிந்து விழுந்தது. இதனை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு சரிந்து விழுந்த தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகி்ன்றனர். தகவல் அறிந்்த நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று கோரையாற்று கரையை பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.