தென்னை மரத்தில் மின்னல் தாக்கி தீ பிடித்தது

நாட்டறம்பள்ளி அருகே தென்னை மரத்தில் மின்னல் தாக்கி தீ பிடித்தது.

Update: 2023-04-03 17:29 GMT

நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 9.40 மணியளவில் பலத்த காற்றுடன் இடி மின்னல் ஏற்பட்டது. அப்போது நாட்டறம்பள்ளி அருகே தாசியப்பனூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடி வந்து பார்த்து போது தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். தென்னை மரத்தின் மீது தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்